ஹொரண பிரதேசத்தில் இனந்தெரியாத கும்பல் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட ஹொரணை பொலிஸ் அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கடத்தலை மேற்கொண்டவர்களும் பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.