போலி விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லை கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் யாழ்ப்பாணம் வெல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
விமான போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாரணையில், இந்த இத்தாலி விசாக்கள் பொய்யான தகவல்களைக் கொண்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அதனையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்