யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா (வயது – 25) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.