-யாழ் நிருபர்-
நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழலில், தியாகி அறக்கட்டளை நிதியத்தினால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை உதவு தொகை வழங்கப்பட்டது.
மாணவர்கள் தமது உயர்கல்விகளை தடையின்றி தொடர ஊக்குவிக்கும் முகமாக, பொருண்மியம், நலிந்த 100 மாணவர்களுக்கு, தியாகி அறக்கட்டளை நிதிய நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவனால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து குறித்த ஊக்குவிப்பு தொகையை பெற்றுக்கொண்டனர்.