-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இணைய வசதியுடன் கூடிய நவீன கணனி ஆய்வுகூடம் திரு . இராஜநாயகம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் அபயம் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையில் இன்றைய தினம் சனி கிழமை மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, நிதி அனுசரணையாளர்கள், தாதிய மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





