யாழ் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றும் அகழ்வு பணிகள் முன்னெக்கப்படுகின்றன .
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 18 நாளாகவும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
, நேற்றைய தினம் மனிதப் புதைகுழியில் 5 என்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 2 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரையில் 85 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 67 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன