-யாழ் நிருபர்-
யாழ் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவத்தின் குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ உதயகுமாரவின் அழைப்பின் பேரில் காசிப்பிள்ளை சதாசிவத்தின் குடும்ப உறுப்பினர்களால் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறைச்சாலை உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





