யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடைபெறுகிறது.
இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது .
இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள்விசேட விலைக்கழிவுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன .
சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.