யாழ்ப்பாணம், கொடிகாமம் வெள்ளன்பொக்கடி பகுதியில் இளம் வர்த்தகர் ஒருவரை தாக்கி 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் 07 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கொடிகாமம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
வர்த்தகர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில், வர்த்தகர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் பொலிஸார், யாழ்ப்பாணம் தவசிக்குளம் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்ததுடன், திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்