யாழ் பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலையைச் சேர்ந்த குறித்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில், ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஹெரோய்னை ஊசி மூலம் குறித்த சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.