யாழ் குருநகர் பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையி்ன் போது 1 கிலோவுக்கும் அதிகமான ரி.என்.ரி உயர் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காகவே இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.