யாழில் மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டம்

யாழ். மாவட்ட சமுதாயச் சங்கிலி idove youth முன்னெடுத்து வரும் சமய நல்லிணக்க மற்றுமொரு செயற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக இன்று வியாழக்கிழமை கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் இத்திட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலையில் உக்க கூடிய கழிவுகளை சேகரித்து பசளையாக்குதல், பொலித்தீன் பாவனையினை நீக்குதல், பாடசாலையில் தோட்டத்தினை அமைப்பதன் மூலம் மாணவர்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, பகிர்தல் என்பவற்றினை வளர்த்துகொள்ளல், இனம், மதம், சாதி வர்க்க வேறுபாடின்றி மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்த்தல், தற்சார்பு பொருளாதாரத்தினை மாணவர்களூடாக பெற்றோருக்கு கொண்டுசெல்லல் போன்றவற்றை உள்ளடக்கி இன்றைய இந்த செயற்பாடு அமைந்தது.