யாழ்ப்பாணம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ் நகர் பகுதியை நோக்கி பட்டா ரக வாகனத்தில் மாடுகளை கடத்தி சென்ற வேளை மண்டைதீவு சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில், பொலிஸார் வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே மாடுகளை கடத்தி செல்லப்படுவதனை கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து மாடுகளை கடத்திய குற்றத்தில் வாகன சாரதியை கைது செய்த பொலிஸார் வாகனத்தையும் , நான்கு மாடுகளையும் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.