-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இன்று காலை பெய்த மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும் ஜே/363 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7பேரும்இ ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.