யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையொன்றில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது – 46) என்பவரும் வேலாயுதம் ரவி (வயது – 38) என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.