யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் குறித்த சந்தேகநபர் சுற்றி வளைக்கப்பட்டதுடன் அவரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.