யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ஞாயிற்று கிழமை பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
வெடி பொருட்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.