யாழ். பருத்தித்துறை பகுதியில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்வாய் பகுதியை சேர்ந்த அருமைராசா சிந்துஜன் (வயது – 27) எனும் நபரே காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில்,
வாள்வெட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.