யாழ்ப்பாண பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தான் வீட்டில் இல்லாத வேளை வீட்டில் இருந்த தனது நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
பெண் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பெண்ணின் சகோதரனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த போது சகோதரியின் நகைகளை தான் களவாடியதை ஒப்புக்கொண்டதுடன் அதனை அடகு வைத்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அவரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் , அடகு வைக்கப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.