யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நான்கு கோவில்களை உடைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரின் வங்கிக் கணக்குகளில் மூன்று கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று நான்கு பிரதான கோவில்களில் திருடிய பின்னர் கொழும்பு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் ஆலயம் ஒன்றில் திருடுவதற்காக யாழ்ப்பாணம் சென்ற போது மானிப்பாய் கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.