-யாழ் நிருபர்-
யாழில் சகலனுடன் கடலுக்குச் சென்ற நபர் ஒருவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
விநாயகர் வீதி, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த அரியகுட்டி ஹரிஹரன் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும் தெரியவருகையில்,
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது சகலனுடன் கடல் தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் படகிலேயே மயக்கமடைந்தார்.
மயக்கமடைந்த அவருடன் சகலன் அதிகாலை 2 மணியளவில் கரை சேர்த்தார்.
பின்னர் வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடல்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.