யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண் குடும்பத் தகராறையடுத்து அலரி விதையை மிக்சியில் அரைத்து குடித்து நேற்று புதன் கிழமை மாலை உயிரை மாய்த்துள்ளார்.
மறவன்புலவு பிரதேசத்தை சேர்ந்த மினேஸ் சங்கீதா (வயது – 24) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.