-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து நேற்று காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதன்போது பொன்னாலை சந்தியில் குறித்த பேருந்தை வழிமறித்து, பேருந்தின் சாரதி மீதும் நடத்துனர் மீதும் தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேரப் பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த அரச பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குறித்த தனியார் பேருந்து சாரதியை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.