-யாழ் நிருபர்-
பிரித்தானியாவின் இளவரசி 05 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார்.
நாளை வியாழக்கிழமை வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நிலையில், பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானியா நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார் என அறியமுடிகிறது.
பிரித்தானியாவின் இளவரசியின் மெய் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக்குழுவினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வந்துள்ளனர்.
நாளைய நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள், வரவேற்பு ஒழுங்குகள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள், கலந்து கொள்ளுவர்களுக்கான ஒழுங்குகள் குறித்து ஆராயப்பட்டன.
இதில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், இலங்கைக்கான பிரித்தானிய தூதர ஆலோசகர் கஜயனி பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

