மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த ‘சீதா’ எனும் யானை மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாகவும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.