அம்பாந்தோட்டை, ரன்மினிதென்ன பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம்.டி. சந்திரசேன என்ற (வயது – 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மருமகனின் வீட்டிற்கு வந்த நிலையில் மருமகனின் பண்ணையை பாதுகாத்துக்கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.