மெதிரிகிரிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரிய புதிய நகரத்தில் வீட்டின் வௌியே வந்த 72 வயதான வயோதிபரையே யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.