பனாமுர பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை யானை தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டு படுகாயமடைந்த மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.