ஹொரணையில் பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு முன்பாக குழந்தையுடன் யாசகம் செய்து கிடைக்கும் பணத்தில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஸ்ஓவிட்ட பஹலமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பத்து மாதங்களுக்கு முன்னர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள அழகூட்டல் நிலையமொன்றில் பணி புரிந்துள்ளதாகவும் பணிபுரியும் காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.