குருநாகல் பகுதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த நபரை தலைக்கவசத்தினால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட குளியாபிட்டி பொலிஸ் அத்தியட்சகர் அருபொல உப பொலிஸ் பரிசோதகரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பாதசாரி குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.