யாழ்ப்பானம் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்ட இளைஞர் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.