கொழும்பு – கண்டி வீதியின் பேலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவருமான 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.