முல்லை தீவு – புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்ததில் படுகாயம் அடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.