கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேலியகொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரில் இருந்த மின் கம்பத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.