பனாகொட இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் காதலனும் காதலியும் பயணித்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.