இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், மனைவியை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் தடுத்ததால் கண்களை கத்தரிகோளால் குத்தியுள்ளதாக கணவன் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
பாரௌத்தில் வசிக்கும் அன்கித் (வயது – 28) என்பவர் சூப் கிராமத்தில் வசிக்கும் பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்ததுடன் கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையில் தகறாறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே சம்பவ தினத்தன்று அங்கித் தனது மனைவியை மொபைலைப் பயன்படுத்துவதைத் தடுத்ததும், அவள் கோபமடைந்து அறைக்குள் சென்று சிறிது நேரம் கழித்து, கத்தரிக்கோலை எடுத்து கட்டிலில் அமர்ந்திருந்த கணவன் அங்கித்தின் கண்களில் குத்தியுள்ளார். இதனால் அங்கித் ரத்தம் கசிந்து தரையில் விழுந்தார்.
சத்தம் கேட்டு அந்த இளைஞனின் அண்ணியும், மருமகனும் ஓடி வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.