கற்பிட்டியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு தனது இரு மைத்துனர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சமரசம் செய்ய முற்பட்டபோதே கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.