தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிப பெண் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.