உலக வாழ் இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, தமிழகத்தின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
82 வயதுடைய அடிகளார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இவர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்ததுடன் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கிய புகழையுடையவர்.
மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை புலம்பெயர்வாழ் தமிழர்களும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வழிபடவென்றே தமிழகம் செல்வார்கள்.