பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையில் மேலும் 999 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சோதனையின் போது, 453 கிராம் ஹெரோயின், 306 கிராம் ஐஸ், 940 கிராம் கொக்கெய்ன் மற்றும் 57 கிலோ கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 26 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.