இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலைகள் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.