-மூதூர் நிருபர்-
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மூதூரில் உள்ள பொது மயானங்களை துப்புரவு செய்யும் சிரமதானப்பணி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக மூதூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.ஜம்சீத் தலைமையில் இவ் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மூதூரில் உள்ள நான்கு பொது மயானங்களின் உட்பகுதி, வெளிப்பகுதி என்பன சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
இதில் மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம மக்கள் இணைந்து சிரமதானப்பணி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டமானது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூர் ஆட்சி மன்றங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.