கண்டி – மஹியங்கனை வீதி இன்று திங்கட் கிழமை மாலை 6:00 மணி முதல் மூடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதி இன்று மாலை 6:00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கஹடகொல்ல பகுதியில் 44/1 கிலோமீட்டர் தூண் அருகே வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.