நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடந்த 27ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளினதும் விடுமுறையானது டிசம்பர் 05ஆம் திகதி (வெள்ளிக் கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சகல முஸ்லிம் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.