-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா வலய கல்வி அலுவலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் அதிபர் எம். மன்சூர் அலியின் வேண்டுகோளுக்கமைவாக ராபிதா நளீமிய்யீன் பழைய மாணவர் அமைப்பு திருகோணமலை மாவட்ட பிராந்திய கிளை ஏற்பாட்டில் சஹாரா பவுண்டேஷன் அனுசரனையுடன் தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பிரதான கேட்போர்கூடத்தின் பாவனைக்கு ஒரு தொகை கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் அதிபர் எம். மன்சூர் அலி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. நசூஹர்கான் (நளீமி), அவர்களும் விசேட அதிதியாக முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.கே.நசூர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. றிகாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் ராபிதா நளீமிய்யீன் பழைய மாணவர் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பிராந்திய கிளை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். தாரிக் (நளீமி), அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நளீமி), அஷ்ஷெய்க் ஏ.ஆர். சஜீத் (நளீமி), அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம். பஹீ (நளீமி), அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். அஸ்மீர் (நளீமி), அஷ்ஷெய்க் எம்.யூ. இம்தியாஸ் (நளீமி), அஷ்ஷெய்க் எம்.கே. இஹ்ஸான் (நளீமி) மற்றும் ஆசிரியர் எச்.எம்.ஹனீஸ் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.


