முல்லைத்தீவில் வெடிமருந்துகள் மீட்பு

முல்லைத்தீவு பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிமருந்துகள் கொண்ட பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிமருந்துகள் ரி56 வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தபடுபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரிகள் குழு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு பொலிஸார் இந்த வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க