கெஸ்பேவ ஹல்பிட்ட பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த 5ஆம் திகதி பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரை காரில் வந்த நபர் கத்தியால் குத்தி விட்டு காரில் தப்பி சென்றுள்ளார். அருகில் இருந்த ஒருவர் காரின் பதிவு எண்ணின் கடைசி எண் 4ஐ காகிதத்தில் எழுதி கடையில் கொடுத்துள்ளார்.
இதன்படி அதன் பதிவு உரிமையாளரை அடையாளம் கண்டதுடன் கார் வாடகை அடிப்படையில் கொடுத்தது தெரியவந்ததையடுத்து, வாடகைக்கு எடுத்த தொழிலதிபரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.