நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே பிரதமரின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் மூலம் 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 50 தற்காலிக கிடங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.