அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.