முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்து, முன்னாள் ஜனாதிபதிக்கு வழிவிடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த கட்சியிடமிருந்தும் அதற்கான கோரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் பாராளுமன்றம் வரும் எண்ணம் இல்லை எனவும் தாம் நம்புவதாகவும் எனினும் அவர் மீண்டும் அரசியலுக்கு வர தீர்மானித்தால் தனது பதவியை துறக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.